Monday, May 7, 2007

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

இது எங்கேயும் எப்போதும் நினைத்தவுடன் இனிக்கக் கூடிய பாடல், நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் இருந்து எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல். படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்ரபா, கீதா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தை இது ஒரு இன்னிசை மழை என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். படமும், பாடல்களும் அதை உண்மை என்றே நிரூபித்திருக்கும். படத்தின் முதலில் இருந்து கடைசி வரை பாடல், இசை மயம் தான். அந்தக் காலத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் எடுத்த படம்.

இந்தப் பாடல் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து விடும். சிறிது லேட்டாகப் போனாலும் பாட்டு முடிந்து விடும். எனக்கு முதன் முதலில் பார்த்த போது இந்தப் பாட்டை மிஸ் பண்ணியது இன்னும் நினைவிருக்கிறது. அதன் பிறகு பாட்டுக்காகவே சீக்கிரம் சென்று விடுவோம். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே கிடையாது. இந்தப் படமும் மன்மத லீலையும் நம் ஊரில் காலைக் காட்சிகளாக அடிக்கடி வரும், ஒவ்வொரு முறையும் பார்த்து விடுவது வழக்கம். மலரும் நினைவுகள் போதும்.

கமல்ஹாசனின் அந்தக்கால நடனத்துடன், அந்தக்கால ரஜினி ஸ்டைலோடு எஸ்.பி.பியின் குரலும் சேர்ந்து பாடல் கேட்கும் போதே கிறங்கடிக்கும்.

எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாஸ்திரங்கள் ஓடி விடும் - எங்கேயும்

கட்டழகுப் பொண்ணிருக்க
வட்டமிடும் பாட்டிருக்க
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ர ர ரி ஹோ - எங்கேயும் எப்போதும்

காலம் சல்லாபக் காலம் ஓ
உலகம் உல்லாசக் கோலம் ஓ
இளமை ரத்தங்கள் ஊறும் ஓ
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்
தித்திக்கத் தித்திக்கப் பேசிக் கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம் - கட்டழகுப்

காலை ஜப்பானில் காப்பி
மாலை நியூயார்க்கில் காபரே ஓ
இரவில் தாய்லாந்தில் ஜாலி ஓ
இதிலே நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவுப் பொழுது நமது பக்கம்
விடிய விடியக் கொண்டாடுவோம் - கட்டழகுப்

ஆடை இல்லாத மேனி ஓ
அவன் பேர் அன்னாளில் யானி ஓ
இன்றோ அது ஒரு ஹாபி ஓ
எல்லோரும் இனிமேல் பேபி
வெக்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு come on everyboday
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு join me ha
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை - கட்டழகுப்



இன்னிசை மழை என்ற பெயருக்கு ஏற்ப இந்தப் படத்திலுள்ள மற்ற பாடல்கள்,
நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
வாட் அ வெய்ட்டிங் வாட் அ வெய்ட்டிங்
சாயனோரா
தட்டிக் கேட்க ஆளில்லேன்னா
னிழல் தந்தவன்

என்ற மற்ற பாடல்களும் இனிமையான பாடல்கள், எல்லா பாடல்களுமே எஸ்.பி.பி. பாடியது தான். டி.எம்.எஸ். ஏன் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

டல்லாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும் போது இந்தப் பாட்டைக் கேட்டால் போதும், மனம் சந்தோசமாகி விடும்.

Saturday, April 21, 2007

பல்லேலக்கா - சிவாஜி பாடல்

சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாட்டை சட்டென சொல்லு என்று யாராவது கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பி. பாடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பல்லேலக்கா என்ற ரஜினி பாடல் தான். சடுகுடு சடுகுடு என்று விளையாடிய குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியது.

அப்பா...என்ன வேகம் இந்தப் பாடலில்...சூரியனோ சந்திரனோ என்று கோரஸில் ஆரம்பிக்கும் பாடல், யே..பல்லேலக்கா பல்லேலக்கா என்று எஸ்.பி.பி. தடதட அதிவேக ரயில் குரலில் ஆரம்பித்தவுடன் எகிறுகிறது. அதுவும் மெய் மெய் மெய் என்று (எத்தனை மெய்...யப்பா) சொல்லும் போது எங்கேயோ இழுத்து செல்லுகிறது.

பாடலின் வரிகள் எல்லாம் மலரும் நினைவுகள் தான்...




சடுகுடு..சடுகுடு..ஆடிய மரத்தடி
படுபடு படுபடு படுவென போத்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை





அப்படியே நம்ம ஊருக்கு இழுத்துச் சென்று ரயிலடியிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும், ஆத்தோரத்திலும், மீசையை தடவிக் கொண்டு சென்ற இள வயசை நினைவுபடுத்துகிறது. என்ன, நம்ம ஊரில் காவேரி ஆறுக்குப் பதிலாக வைகைக் கரையில் அலைந்தோம்.




என் மகள் இந்தப் பாடலை பாட முயற்சி செய்கின்றாள். அத்தனை வரிகளையும் மனப்பாடம் செய்து பாடுவதாக உத்தேசம்.


பாடலில் மிகவும் பிடித்தவைகள்...
தாவணி பெண்களும் தூதுவிடும் கண்களும் கொடுக்கும் கலகல சிரிப்பு
திருத்தணிக்கா பாலுவின் அடித்தொண்டையில் இருந்து வரும் ரிப்பீட் குரல்
மெய் மெய் மெய் என பல முறை சொன்னாலும் ஒரு முறை மட்டும் மெய்ய்ய்ய் என இழுத்து பாடும் போது (பாடலின் முடிவில்)
தட தடவென வரும் இசை
சரணங்களில் உள்ள மெலடி (ராஜாவின் சாயல்???)
செல்போனை அணைத்து சில்வண்டின் ரீங்காரம் கேட்போம், வெறும் கால்களில் நடந்து மண்ணோடு பேசிக் கொண்டு செல்வோம் என்பது போன்ற தரமான வரிகள்
எஸ்.பி.பி.யின் தெளிவான உச்சரிப்பு
மஹிந்தியின் பஞ்சாபி பாடலை நினைவு படுத்தினாலும் பல்லேலக்கா பல்லேலக்கா என்ற வரிகள்

அட, சீக்கிரமா படத்த ரிலீஸ் பண்ணுங்கப்பா, ரெண்டு வருசமா ஒரே படத்த எடுத்துக் கிட்டு....

பாடலின் முழு வரிகள்: ( நன்றி: கோவை ரவீ, எஸ்.பி.பி. ரசிகர்கள் குழு)

சூரியனோ சந்திரனோ
யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர பாண்டிய சோழன் இவனோ
சொல்லு சொல்லு
சட்டென்ன சொல்லு

சூரியனோ சந்திரனோ யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர பாண்டிய சோழன் இவனோ
சொல்லு சொல்லு
சட்டென்ன சொல்லு

பாரடி பாரடி பாரடி
இவனோ பாய்கிற சிறுத்தையின் காலடி
இவனோ கூறடி கூறடி யாரடி
இவனோ கேட்டதை பட்டென்ன சுட்டிடும் இவனோ

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா


காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
ஹ ஹ ஹ நம்ம களத்து மேடு
கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு

ஹே
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..

ஆடிய மரத்தடி
படுபடு படுபடு படுவென போத்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை

மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

சூரியனோ சந்திரனோ யார் இவனோ
சட்டென்ன சொல்லு
சேர சோழ பாண்டியன் இவனோ
சொல்லு சொல்லு சட்டென்ன சொல்லு

சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டென்ன சொல்லு
சேர சோழ பாண்டியன் இவனோ
சொல்லு சொல்லு சட்டென்ன சொல்லு

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மதராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா
சட்டென்ன சொல்லு சட்டென்ன சொல்லு

யே லே லேகிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப்பாருலே
கூரை ஒட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப்பாருலே

கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்

ஆலமரத்துக்கு ஜடை பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊர் ஓரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

ஒ காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓஒ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
த தரா தராசட்டென்ன சொல்லு

யே லேலே..
அஞ்சரை பெட்டியிலே
ஆத்தாவோட ருசி இருக்கும்

ஸ்ஸ்ஸ்ஸ்....
அம்மியில் அரைச்ச்சு வெச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்

யேலேலே
ஆடு மாடு மேலே உள்ள பாசம்
வீட்டு ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்

வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணெங்கும் வீசும்
பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பயம் ஓடிப்போகும்

பங்காளி
பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்
ஹே..

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

காவேரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா
மறந்து போகுமா
ஓ தாவணி பெண்களூம் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா

ஹ ஹ ஹ
நம்ம களத்து மேடு
கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு

ஹே
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..
சடுகுடு..சடுகுடு..

சடுகுடு..சடுகுடு..
ஆடிய மரத்தடி
படுபடு படுபடு
படுவென போத்திய
புல்வெளி

தொட தொட
தொட தொட
உடைகிற பனித்துளி

சுட சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட வென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசை

மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா
திருத்தணிக்கா
திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா

யே.. பல்லேலைக்கா..பல்லேலைக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

கூல்

Wednesday, March 14, 2007

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

உதயகீதம் - இந்தப் படம் மைக் மோகன் என்று செல்லமாக இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன், லட்சுமி மற்றும் ரேவதி நடித்தது. படம் ஆரம்பித்தவுடனே வரும் பாடல் இது.

மோகன் பெரிய பாடகராக இருப்பது போலவும் அவருடைய பாடலைக் கேட்க ரசிக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது போலவும், ரேவதி சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரைப் பார்த்தவுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் செலவது போலவும் படத்தில் வரும்.

மோகனின் அக்மார்க் சிரிப்புடன் அவர் ஸ்டைலில் ஆடிப் பாடுவார் இந்தப் பாடலுக்கு (மோகன் ஸ்டைல் என்ன என்று என்னிடம் கேட்க வேண்டாம். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அதிர்ஷ்டசாலியான நடிகர் என்றால் மோகன் தான். எல்லாப் படத்திலுமே பெரிய பாடகராகவோ அல்லது நன்றாகப் பாடத்தெரிந்தவராகவோ வருவார். எல்லாமே எஸ்.பி.பி & ராஜா இருவரின் தயவால் தான்)

இந்தப் பாடலை ஆயிரம் முறைக் கேட்டாலும் சலிக்காது. ராஜா இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்தில் மேற்கத்திய இசையின் கவுண்ட்டர் பாயிண்ட் முறையில் வயலினையும், டிரம்ப்பட் இசைக் கருவியையும் உபயோகப் படுத்தியிருப்பார்.

இந்தப் பாடலைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. இருந்தாலும் இன்னொரு முறை தான் பாருங்களேன்.




Tuesday, February 27, 2007

இளைய நிலா பொழிகிறதே - பாடல்

இந்த பாடல் வெளி வந்த சமயத்தில் இப்போது உள்ளது போல் பாடல்களை அடிக்கடி கேட்க முடியாது. ஆல் இந்தியா ரேடியோ-வில் மட்டும் தான் நாங்கள் கேட்க முடிந்தது(கேசட் பிளேயர் இருந்தால் கேட்கலாம். எல்லோரிடமும் கேசட் பிளேயர் இல்லாத காலம், நெட்டும் கிடையாது, டவுன்லோடு என்றால் என்னவென்று அறியாத காலம்). ஆனால் தினமும் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும் ஆல் இந்தியா ரேடியோ-வில்.

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. கிடார் வாசித்த கலைஞர் சிரமப் பட்டதால் இளையராஜாவே அந்தக் கலைஞருக்கு இப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வைக் கொடுக்கக் கூடிய பாடல்.

படத்தில் பார்க்கும் போது அவ்வளவாக ரசிக்க முடியாது, காரணம் படத்தில் சிறிது உரையாடல் இருக்கும் (மோகனும் எஸ்.வி.சேகரும் பேசிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்).

இந்தப் பாடலை திரு.வைரமுத்து முதலில் சலவை நிலா பொழிகிறது என்று எழுதியிருந்தார். அந்த வரி சரியில்லை என்று சொல்லியதால் இளைய நிலாவாக மாற்றிவிட்டதாக சமீபத்தில் வந்த பாட்டுக்குப் பாட்டு (சன் டி.வி.) நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னார்.

எஸ்.பி.பி-யின் குரலுக்காகவும் ராஜாவின் இசைக்காகவும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். நீங்களும் இன்னொரு முறை இந்த பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள்.


Tuesday, February 20, 2007

இளைய நிலா பொழிகிறதே

இந்த வீடியோ க்ளிப்பைப் பாருங்கள். சமீபத்தில் திரு. எஸ்.பி.பி. அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் (ஜெயா டி.வி.) இருந்து எனக்கு பிடித்த பகுதி.

இளைய நிலா பாடலின் இசையைப் பற்றியும் இளையராஜா இசை அமைத்த விதத்தை பற்றியும் அவருக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்.
இந்தப் பாடலை அவர் ஆயிரம் முறை பாடியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அனுபவித்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே. இந்தப் பாடலை அவர் பாடி பலமுறை இசை நிகழ்ச்சிகளிலும், தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கிறேன். இன்னமும் அனுபவித்து பாடுகிறார்.





பயணங்கள் முடிவதில்லை படம் வெளி வந்த போது கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். பரீட்சை சமயமாதலால் படம் ரிலீசானவுடன் பார்க்க முடியவில்லை. ஆனால் பாடல் ரேடியோவில் கேட்டு இருந்ததால் பரீட்சை முடிந்த அன்று இரவே படம் பார்க்க சென்றது நினைவிருக்கிறது.

Saturday, January 27, 2007

எனக்கு பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஏன் எனக்கு பிடிக்காதா என்று சண்டைக்கு வர வேண்டாம். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடித்த அந்த எஸ். பி. பியின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்ததன் விளைவு தான் இந்த பக்கம்.

முதலில் எனக்கு விவரம் தெரியாத வயதில் பார்த்த படத்தில் இருந்து ஒரு பாடல். கதை ஏதோ ஒன்று. கமல் ஆடி நடித்த பாடல், உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில், பட்டிக் காட்டு ராஜா என்ற படத்தில் இருந்து. இந்தப் பாடல் மட்டும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது,

இன்று வரை நான் மிகவும் விரும்பி கேட்கும் எஸ்.பி.பி.பாடல்.சங்கர் கணேஷ் இசையில் கமலின் நடனத்துக்கு பப்பப பப பா பா என்று அந்தக் கால குரலில் ஹம்மிங் பாடி அசத்தியிருப்பார்.