Wednesday, March 14, 2007

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

உதயகீதம் - இந்தப் படம் மைக் மோகன் என்று செல்லமாக இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன், லட்சுமி மற்றும் ரேவதி நடித்தது. படம் ஆரம்பித்தவுடனே வரும் பாடல் இது.

மோகன் பெரிய பாடகராக இருப்பது போலவும் அவருடைய பாடலைக் கேட்க ரசிக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது போலவும், ரேவதி சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரைப் பார்த்தவுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் செலவது போலவும் படத்தில் வரும்.

மோகனின் அக்மார்க் சிரிப்புடன் அவர் ஸ்டைலில் ஆடிப் பாடுவார் இந்தப் பாடலுக்கு (மோகன் ஸ்டைல் என்ன என்று என்னிடம் கேட்க வேண்டாம். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அதிர்ஷ்டசாலியான நடிகர் என்றால் மோகன் தான். எல்லாப் படத்திலுமே பெரிய பாடகராகவோ அல்லது நன்றாகப் பாடத்தெரிந்தவராகவோ வருவார். எல்லாமே எஸ்.பி.பி & ராஜா இருவரின் தயவால் தான்)

இந்தப் பாடலை ஆயிரம் முறைக் கேட்டாலும் சலிக்காது. ராஜா இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்தில் மேற்கத்திய இசையின் கவுண்ட்டர் பாயிண்ட் முறையில் வயலினையும், டிரம்ப்பட் இசைக் கருவியையும் உபயோகப் படுத்தியிருப்பார்.

இந்தப் பாடலைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. இருந்தாலும் இன்னொரு முறை தான் பாருங்களேன்.