Monday, May 7, 2007

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

இது எங்கேயும் எப்போதும் நினைத்தவுடன் இனிக்கக் கூடிய பாடல், நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் இருந்து எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல். படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்ரபா, கீதா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தை இது ஒரு இன்னிசை மழை என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். படமும், பாடல்களும் அதை உண்மை என்றே நிரூபித்திருக்கும். படத்தின் முதலில் இருந்து கடைசி வரை பாடல், இசை மயம் தான். அந்தக் காலத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் எடுத்த படம்.

இந்தப் பாடல் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து விடும். சிறிது லேட்டாகப் போனாலும் பாட்டு முடிந்து விடும். எனக்கு முதன் முதலில் பார்த்த போது இந்தப் பாட்டை மிஸ் பண்ணியது இன்னும் நினைவிருக்கிறது. அதன் பிறகு பாட்டுக்காகவே சீக்கிரம் சென்று விடுவோம். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே கிடையாது. இந்தப் படமும் மன்மத லீலையும் நம் ஊரில் காலைக் காட்சிகளாக அடிக்கடி வரும், ஒவ்வொரு முறையும் பார்த்து விடுவது வழக்கம். மலரும் நினைவுகள் போதும்.

கமல்ஹாசனின் அந்தக்கால நடனத்துடன், அந்தக்கால ரஜினி ஸ்டைலோடு எஸ்.பி.பியின் குரலும் சேர்ந்து பாடல் கேட்கும் போதே கிறங்கடிக்கும்.

எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாஸ்திரங்கள் ஓடி விடும் - எங்கேயும்

கட்டழகுப் பொண்ணிருக்க
வட்டமிடும் பாட்டிருக்க
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ர ர ரி ஹோ - எங்கேயும் எப்போதும்

காலம் சல்லாபக் காலம் ஓ
உலகம் உல்லாசக் கோலம் ஓ
இளமை ரத்தங்கள் ஊறும் ஓ
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்
தித்திக்கத் தித்திக்கப் பேசிக் கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம் - கட்டழகுப்

காலை ஜப்பானில் காப்பி
மாலை நியூயார்க்கில் காபரே ஓ
இரவில் தாய்லாந்தில் ஜாலி ஓ
இதிலே நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவுப் பொழுது நமது பக்கம்
விடிய விடியக் கொண்டாடுவோம் - கட்டழகுப்

ஆடை இல்லாத மேனி ஓ
அவன் பேர் அன்னாளில் யானி ஓ
இன்றோ அது ஒரு ஹாபி ஓ
எல்லோரும் இனிமேல் பேபி
வெக்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு come on everyboday
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு join me ha
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை - கட்டழகுப்



இன்னிசை மழை என்ற பெயருக்கு ஏற்ப இந்தப் படத்திலுள்ள மற்ற பாடல்கள்,
நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
வாட் அ வெய்ட்டிங் வாட் அ வெய்ட்டிங்
சாயனோரா
தட்டிக் கேட்க ஆளில்லேன்னா
னிழல் தந்தவன்

என்ற மற்ற பாடல்களும் இனிமையான பாடல்கள், எல்லா பாடல்களுமே எஸ்.பி.பி. பாடியது தான். டி.எம்.எஸ். ஏன் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

டல்லாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும் போது இந்தப் பாட்டைக் கேட்டால் போதும், மனம் சந்தோசமாகி விடும்.