Monday, June 8, 2009

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

இந்தப் பாடலை தற்செயலாக கேட்க நேர்ந்தது. பாடலின் முதலில் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தக் காந்தக் குரலை ரசித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் பாலு சார் நுழைந்து எங்கேயோ இழுத்துக் கொண்டு சென்று விடுவார். பாலு சார் மற்றும் ஸ்வர்ணலதா இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் எல்லாமே அற்புதமான பாடல்கள். இந்த இருவரின் இணைந்த பாடல்களுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

பாலு சாரின் அள்ளிக் கொண்ட என்று நுழையும் போதே தெரிந்து விடும், ஆள் நம்மை எங்கேயோ தள்ளிக் கொண்டு செல்லப் போகிறார் என்று. எல்லோருக்கும் ஆச்சரியமானதும் அதிசயமானதும், எப்படி அவர் சிரித்துக் கொண்டே அதுவும் ரொம்ப சுலபமாக பாடுகிறார் என்பது தான், இந்தப் பாடலில் அந்த மாதிரி சில இடங்களில் கலக்கி இருப்பார். கடவுள் கொடுத்த மிகப் பெரிய வரம் அவருக்கு, குரல் வளம். நீண்ட ஆயுளைக் கொடுத்து ராஜா சாருடன் இணைந்து தமிழில் பாட அமைய வேண்டும்.



இதோ பாடலின் வரிகள் ...

ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓ...பைங்கிளி...நிதமும்

(என்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆழ வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...
அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா ...
ஓ...பைங்கிளி...நிதமும்
என்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆஆஆ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...
என்னில் நீயடி...
உன்னில் நானடி...
என்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓ பைங்கிளி... நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...
அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓ...பைங்கிளி...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

Thursday, June 4, 2009

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

இன்று பாலு சாரின் பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்தவுடன் மனதுக்குள் வந்த பாடல் இது. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்,

மறுபடியும் என்ற படத்தில் இருந்து எஸ்.பி.பாலு சார் பாடிய இனிமையான பாடல். சோகமான பாடல் தான், ஆனால் சுகமானது. இசைஞானியின் இனிய இசை மனதை வருடி விடும்.

இந்தப் படத்தை மதுரையில் மினிப்ரியா என்ற சிறிய தியேட்டரில் படம் ரிலீசான போது பார்த்தேன். இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் அந்தக் கால நினைவுகளை அப்படியே கொண்டு வந்து விடும். ராஜாவின் பாடல்கள் எல்லாமே அப்படித் தானே. இந்தப் பாடல் மட்டும் விதிவிலக்கா என்ன ?

ராஜாவின் இசையில் பாலு பாடிய தமிழ் பாடல்களை கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் தோன்றுவது இது தான், இரு நண்பர்களும் இணைந்து கொடுக்கும் அடுத்த தமிழ் பாடல் எப்போது எப்போது எனபது தான் ?

மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா என்பதைப் போல ரசிகர்களின் மனசில் இருக்கும் ஏக்கம் கேட்குமா அவர்களுக்கு ?

இந்த பாடலின் இசையை பற்றி விளக்க எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இருந்தாலும் இதில் வரும் கிடார் இசை மனதுக்கு சுகமானது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தில் ரேவதி கணவனின் நடவடிக்கை கண்டு மனம் வெதும்பி தனியே இருக்கும் போது, நண்பனாக அறிமுகமாகும் அரவிந்தசாமி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அழைத்து பிறந்த நாள் வாழ்த்து பாடும் பாடல் இது.

எந்த ஊரில் இந்த மாதிரி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் படத்தில் இப்படி ஒரு காட்சியை ஏற்படுத்திய டைரக்டருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும், இல்லை என்றால் இந்த மாதிரி அற்புதமான பாடல் கிடைத்திருக்குமா ?



பாடலின் முழு வரிகள் இதோ...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்

(நலம் வாழ)